/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாயிகள் நிதி பெற மனு அளிக்கும் முகாம்
/
விவசாயிகள் நிதி பெற மனு அளிக்கும் முகாம்
ADDED : அக் 18, 2024 06:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: மத்திய அரசு மூலம் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கபடுகிறது.
நெல்லிக்குப்பம் நகர பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இவர்களில் சிலருக்கு மட்டுமே இந்த நிதி கிடைத்து வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நகர பகுதி விவசாயிகளும் நிதி பெறும் வகையில் மனுக்கள் பெறும் முகாம் நேற்று நெல்லிக்குப்பத்தில் நடந்தது.
அண்ணாகிராமம் வட்டார உதவி இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் ஜெயந்தி முகாமை துவக்கி வைத்தார். 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் மனு அளித்தனர்.