/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
/
வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 18, 2024 04:45 AM
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே முன்விரோதம் காணமாக, வாலிபரை தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த கோரணப்பட்டு, நடுத்தெருவை சேர்ந்தவர் தனபால் மகன் சூரியமூர்த்தி, 22; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, பிரவீன்குமார், அவரது ஆதரவாளர்கள் பரமநாதன், கார்த்திக், மாயவேல் ஆகியோர், சூர்யமூர்த்தியை அவரது வீட்டிற்கு சென்று தாக்கினர். தடுக்க சென்ற சூர்யமூர்த்தியின் சித்தி சந்திராவையும் தாக்கினர்.
புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீசார், பிரவீன்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.