தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கணவரை வெட்டிய மனைவி மீது வழக்கு  

கணவரை வெட்டிய மனைவி மீது வழக்கு  

கணவரை வெட்டிய மனைவி மீது வழக்கு  


ADDED : செப் 04, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையத்தில் கணவரை அருவாமனையால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர் ரமேஷ்.இவரது மனைவி ேஷாபனாதேவி.இருவருக்கும் கடந்த 5 வருடத்திற்கு முன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இருவருக்குமிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு, ரமேஷ் பெயரில் உள்ள சொத்துக்களை தமது பெயரில் எழுதி வைக்க ேஷாபனாதேவி கூறி வந்தார்.இந்நிலையில் கடந்த ஆக., 6ம் தேதி காலை கணவன்,மனைவிக்குமிடையே ஏற்பட்ட தகராறில் ேஷாபனாதேவி ரமேஷின் கையை அருவாமனையால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் கடலுார் அரசுமருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இது குறித்து ரமேஷ் தாயார் செந்தமிழ்ச்செல்வி புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us