/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெட்டிக் கடையில் பெட்ரோல் விற்றவர் மீது வழக்கு
/
பெட்டிக் கடையில் பெட்ரோல் விற்றவர் மீது வழக்கு
ADDED : நவ 01, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மளிகை கடையில் பெட்ரோல் விற்றவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மங்கலம்பேட்டை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அப்போது, வலசை கிராமத்தில் உள்ள மளிகை கடையில் தங்கவேல் மகன் மாரிமுத்து, 40, என்பவர் பெட்ரோல் விற்பனை செய்வது தெரிந்தது.
அங்கிருந்து 5 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.