/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி
/
மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி
மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி
மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி
ADDED : செப் 09, 2025 07:41 AM

கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி கொண்டு வந்த மண்ணெண்ணெய் பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம் கஸ்பா தெருவைச் சேர்ந்தவர் நடேசன்,37; அவருக்குச்சொந்தமான இடத்தை அருகிலுள்ளவர்கள் ஆக்கிரமித்து அனுபவித்து வருவதாகவும், அவரது இடத்தை அளந்து அத்துக்காட்ட வேண்டும் எனக்கோரி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.
கலெக்டர் அலுவலக வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை சோதனை செய்த போது அவர் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்த விட்டு செல்ல அறிவுறுத்தி னர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.