/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தென்பாதி கிராமத்தில் சாய்ந்த மின் கம்பம்
/
தென்பாதி கிராமத்தில் சாய்ந்த மின் கம்பம்
ADDED : நவ 18, 2025 06:34 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த தென்பாதி கிராமத்திற்கு செல்லும் மின் கம்பங்கள் சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளது.
தென்பாதி கிராமத்திற்கு செல்லும் மின் கம்பங்கள் சாலையோர வயல்களில் கடந்த 15 ஆண்டிற்கு முன்பு அமைக்கப்பட்டது. இவை தற்போது சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து மின்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை நேரிலும், மனுக்கள் வயிலாகவும் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் மின் கம்பங்கள் அகற்றி புதிய மின் கம்பம் அமைக்கவில்லை.
பலத்த காற்று மழை பெய்தால் கம்பங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றிய புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

