ADDED : ஜூலை 24, 2011 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர் : வயிற்று வலியால் அவதிப்பட்டவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கடலூர் அடுத்த பத்திரக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 45.
விவசாயியான இவருக்கு சில மாதங்களாக அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 22ம் தேதி மாலை மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. விரக்தியடைந்த ராஜேந்திரன் அன்று இரவு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.ஆபத்தான நிலையில் இருந்த ராஜேந்திரனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.