/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நந்தனார் பள்ளியில் முப்பெரும் விழா
/
நந்தனார் பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : பிப் 01, 2024 05:54 AM

சிதம்பரம்: சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சகஜானந்தா பிறந்தநாள் விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியை ஹேமலதா தலைமை தாங்கினார். ஆசிரியர் சம்பத்குமார் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயராமன், பட்டதாரி ஆசிரியர் ராதாகிருஷ்ணன், விடுதி காப்பாளினி விஜயகுமாரி முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் நலத்துறை மண்டல உதவி இயக்குனர் சுப்ரமணியன், பள்ளி துணை ஆய்வாளர் வாழுமுனி ஆகியோர் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் காந்திமதி, தங்க நாணயம் வழங்கினார், ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவி ரமணி, ஆசிரியை ஆனந்த லட்சுமி தொகுத்து வழங்கினார்,
ஏற்பாடுகளை ஆசிரியர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.
ஆசிரியர் சங்க துணைச் செயலாளர் கவுசல்யா நன்றி கூறினார்.