ADDED : மார் 11, 2024 05:10 AM
அ நிறம் | அளவு
பெண்ணாடம், : பெண்ணாடத்தில் காங்., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
நகர தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யூ.சி., ராமலிங்கம், நகர துணைத் தலைவர் சதாசிவம், விவசாய பிரிவு பரமசிவம், மாவட்ட துணைத் தலைவர் இறையூர் கந்தசாமி முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் ராஜீவ்காந்தி, காமராஜ், இருதயராஜ், இளைஞர் காங்., மணிகண்டன், மோகன், குணசேகரன், பூராசாமி, சுந்தரராஜன், அன்பழகன், அழகேசன், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், புதிதாக நியமிக்கப்பட்ட மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. வரும் லோக்சபா தேர்தலில் கடலுார் தொகுதியில் போட்டியிடும் காங்., அல்லது கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி ஜனார்த்தனன் நன்றி கூறினார்.
