/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை
/
ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை
ADDED : ஜூலை 24, 2011 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி : வடலூரில் அடையாளம் தெரியாத ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.கடலூர் - திருச்சி மார்க்கத்தில் நேற்று முன்தினம் இரவு திருச்சி நோக்கிச் சென்ற ரயில் வடலூர் - பண்ருட்டி சாலையில் உள்ள ரயில்வே கேட்டை கடந்தபோது 100 மீட்டர் தூரத்தில் ஒருவர் ரயில் முன் விழுந்தார்.
இதில் அவரது உடல் துண்டாகி இறந்தார்.இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் நீலக்கலர் பேண்ட், வெள்ளை கலர் கோடுபோட்ட சட்டை அணிந்திருந்தார். தலை முற்றிலும் சிதைந்து போனதால் அடையாளம் தெரியவில்லை. சிதம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.