ADDED : ஜன 06, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி, பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் வீட் டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சமத்துவ புரத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் பாரத், 21; இவர், வீட்டில் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்வதாக காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சோதனை செய்த போது கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பாரத்தை, 21; கைது செய்தனர்.