/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நள்ளிரவில் வீடு புகுந்து திருட முயன்றவர் கைது
/
நள்ளிரவில் வீடு புகுந்து திருட முயன்றவர் கைது
ADDED : நவ 10, 2024 04:46 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர், பழைய காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ்,35; இவரது மனைவி செல்வகுமாரி,29; இவர்கள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில் துாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், மொபைல் போன், மற்றும் செல்வகுமாரி அணிந்திருந்த தோடு ஆகியவற்றை திருட முயன்றார். திடுக்கிட்ட செல்வகுமாரி கூச்சலிட, ரமேஷ் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன், மர்ம நபரை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், விருத்தாசலம் அடுத்த சத்தியவாடியைச் சேர்ந்த விருதகாசி மகன் பூமிநாதன், 20, என்பதும், திருட முயன்றதையும் ஒப்புக்கொண்டார். புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து பூமிநாதனை கைது செய்தனர். மேலும், அவர் பயன்படுத்திய பல்சர் பைக்கை பறிமுதல் செய்தனர்.