/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொகுதிக்கு ஒரு மினிஸ்டேடியம்... திட்டக்குடி மக்கள் எதிர்பார்ப்பு
/
தொகுதிக்கு ஒரு மினிஸ்டேடியம்... திட்டக்குடி மக்கள் எதிர்பார்ப்பு
தொகுதிக்கு ஒரு மினிஸ்டேடியம்... திட்டக்குடி மக்கள் எதிர்பார்ப்பு
தொகுதிக்கு ஒரு மினிஸ்டேடியம்... திட்டக்குடி மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 19, 2025 09:35 PM
கடலுார்; தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் தலா 3 கோடி ரூபாய் மதிப்பில் மினிஸ்டேடியம் அமைக்கப்படும் என, துணை முதல்வர் உதயநிதி அறிவித்திருந்தார். ஏற்கனவே 61தொகுதிகளில் ஸ்டேடியம் உள்ள நிலையில், மீதமுள்ள 173 தொகுதிகளில் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக 2023ம் ஆண்டு, முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்துார், துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் உள்ளிட்ட 10 தொகுதிகளில் மினிஸ்டேடியம் அமைக்கும் பணி துவங்கியது.
2024ம் ஆண்டில், இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 22 தொகுதிகளில், கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதி வழுதலம்பட்டு கிராமம், பண்ருட்டி தொகுதி காடாம்புலியூர் கிராமம் இடம் பெற்றது.
முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டு, கட்டிமுடிக்கப்பட்ட மினி ஸ்டேடியங்களை மார்ச் முதல் வாரத்தில், துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்து, இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 22 மினி ஸ்டேடியங்களுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டமாக 25 தொகுதிகளில் மினி ஸ்டேடியங்கள் அமைப்பதற்கான அறிவிப்பு இந்த ஆண்டில் வெளியிடப்பட்டு, 2026 ஜனவரிக்குள் கட்டிமுடிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
கடலுாரில் ஸ்டேடியம், விருத்தாசலத்தில் மினி ஸ்டேடியம், சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக ஸ்டேடியம், நெய்வேலியல் என்.எல்.சி.,ஸ்டேடியம் உள்ளது. குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி தொகுதியில் மினிஸ்டேடியம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள திட்டக்குடி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தொகுதிகளில் மினிஸ்டேடியம் கட்டுவதற்கான இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து பரிந்துரை செய்துள்ளனர்.
தற்போது மூன்றாம் கட்ட பட்டியல் வெளியாக உள்ள நிலையில் மிகவும் பின்தங்கிய பகுதியான திட்டக்குடி தொகுதி இடம்பெற வேண்டும் என இளைஞர்கள், விளையாட்டுஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.