/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுார் தைப்பூச விழா அன்னதானத்திற்கு 10 டன் காய்கறிகள் அனுப்பிய இஸ்லாமியர்

ADDED : ஜன 25, 2024 04:30 AM

கடலுார் : வடலுார் தைப்பூச விழா அன்னதானத்திற்கு, கடலுார் இஸ்லாமியர் ஒருவர், 50 மூட்டை அரிசி, 10 டன் காய்கறிகள் வழங்கினார்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் எஸ்.கே.பி., காய்கறி கடை உரிமையாளர் மற்றும் சிறுபான்மை மக்கள் நல குழு மாவட்ட தலைவர் பக்கீரான்.
சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இவர், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் நடக்கும் தைப்பூச விழா அன்னதானத்திற்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள 10 டன் காய்கறிகள் மற்றும் 50 அரிசி மூட்டைகளை சத்திய ஞான சபைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் 3 ஆயிரம் குடிநீர் பாட்டில்களையும் அனுப்பி வைத்தார்.
நிகழ்ச்சியில் மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், மாநகர செயலாளர் அமர்நாத், வர்த்தக சங்க மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், நகர செயலாளர் வள்ளி விலாஸ் சீனிவாசன், கவுரவ தலைவர் கணேசன், தேவி முருகன், மாவட்ட இணை செயலாளர் சதீஷ், நகர இணை செயலாளர் சரவணன் மற்றும் வெங்கட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.