/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.15,000 மோசடி மர்ம நபருக்கு வலை
/
ரூ.15,000 மோசடி மர்ம நபருக்கு வலை
ADDED : ஏப் 13, 2025 05:24 AM
கடலுார் : கடலுார் முதுநகர் பகுதியில் முதியோர் உதவித் தொகை பெற்றுத் தருவதாக கூறி, பெண்களிடம் பண மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், முதுநகர் மோகன்சிங் வீதியைச் சேர்ந்த 55 வயது மூதாட்டியிடம் கடந்த 9ம் தேதி, பைக்கில் வந்த மர்ம நபர், முதியோர் உதவித் தொகை பெற்றுத்தருவதாக கூறி, 5,000 ரூபாய் பணம் பெற்றார்.
தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த 4 பேரிடம் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை பெற்றுத் தருவதாக கூறி 15,000 ரூபாய் பணம் வசூலித்தார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் நடந்த சம்பவம் குறித்து கடலுார், முதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

