/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவியை பிளேடால் கிழித்த மர்ம நபர்களுக்கு வலை
/
மாணவியை பிளேடால் கிழித்த மர்ம நபர்களுக்கு வலை
ADDED : ஜூலை 25, 2025 02:07 AM
திட்டக்குடி:திட்டக்குடி அருகே மாணவியின் கையை பிளேடால் கிழித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகே 10ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்று காலை, 8:30 மணிக்கு, வழக்கம் போல் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், பைக்கில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், மாணவியை வழிமறித்து, அவரது கையில் பிளேடால் கிழித்து, கன்னத்தில் தாக்கினர்.
இதையடுத்து, மாணவி கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் தப்பினர்.
திட்டக்குடி டி.எஸ்.பி., பார்த்திபன், திட்டக்குடி இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மாணவியின் தந்தை புகாரில், திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

