/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பத்தில் அமைதியாக நடந்த ஆற்றுத் திருவிழா
/
நெல்லிக்குப்பத்தில் அமைதியாக நடந்த ஆற்றுத் திருவிழா
நெல்லிக்குப்பத்தில் அமைதியாக நடந்த ஆற்றுத் திருவிழா
நெல்லிக்குப்பத்தில் அமைதியாக நடந்த ஆற்றுத் திருவிழா
ADDED : ஜன 20, 2024 06:07 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம்,விஸ்வநாதபுரம்,வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு, நத்தப்பட்டு ஆகிய இடங்களில் பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா நடப்பது வழக்கம்.
இதில் பல ஆயிரம் மக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்வார்கள்.ஆண்டுதோறும் ஆற்றுத் திருவிழாவில் பல இடங்களில் கோஷ்டி மோதல் நடக்கும். இதனால் கடைகளை மாலை 4 மணிக்கே காலி செய்ய போலீசார் வலியுறுத்துவார்கள்.
இந்நிலையில் நேற்று நடந்த ஆற்றுத் திருவிழாவுக்கு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் காலை முதல் திருவிழா முடியும் வரை பாதுகாப்பு பணியில் ஈடபட்டனர். இவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதோடு கூட்டமாக கூடுவதை தடுத்தனர்.
இதனால் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் அமைதியாக முடிந்தது. மாலை 6 மணி வரை வியாபாரிகள் கடை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.