/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையை கடக்க முயன்றவர் பஸ் மோதி பரிதாப சாவு
/
சாலையை கடக்க முயன்றவர் பஸ் மோதி பரிதாப சாவு
ADDED : நவ 12, 2024 06:34 AM

புவனகிரி: புவனகிரி அருகே சாலையை கடக்க முயன்றவர் அரசு பஸ் மோதி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், ஏற்காடு லாங்கில்பேட்டையை சேர்ந்தவர் சார்லஸ், 53; இவர், குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று, நேற்று முன்தினம் இரவு புவனகிரி வழியாக சொந்த ஊர் திரும்பினர். புவனகிரி அருகே ரெட்டைக்குளம் அருகே டீக்கடையில் காரை நிறுத்தி டீக் குடித்தனர்.
இதில் சிறு நீர் கழிப்பதற்காக சார்லஸ் சாலையை கடக்க முயன்றார். அப்போது சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. இதில் பலத்த காயமடைந்தவரை, சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று காலை இறந்தார்.
இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். குடும்பத்தினர் கண் முன்னே நடந்த இந்த சம்பவத்தால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.