/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அமைச்சருக்காக காத்திருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம்
/
அமைச்சருக்காக காத்திருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம்
அமைச்சருக்காக காத்திருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம்
அமைச்சருக்காக காத்திருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம்
ADDED : அக் 21, 2024 06:44 AM

நெல்லிக்குப்பம்: காராமணிக்குப்பம் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படாமல் அமைச்சர் வருகைக்காக காத்திருக்கிறது.
நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் ஊராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.
இவர்கள் மருத்துவ சேவைக்காக பல கிலோமீட்டர் துாரம் உள்ள கடலுாருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இப்பிரச்னையை போக்க ரூ. 30 லட்சம் செலவில் காராமணிக்குப்பம் ஊராட்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பணி முழுமையாக முடிவடைந்து திறப்பு விழாவிற்காக காத்திருக்கின்றது.
அமைச்சர் வருகைக்காக காத்திருப்பதாக அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
மக்கள் நலன்கருதி உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.