/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் துவக்கம்
/
வேளாண் மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் துவக்கம்
வேளாண் மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் துவக்கம்
வேளாண் மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் துவக்கம்
ADDED : டிச 28, 2025 06:10 AM

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் இறுதியாண்டு மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் துவக்க விழா நடந்தது.
குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள வெங்கடாம்பேட்டை கிராமத்தில் வேளாண் இறுதியாண்டு மாணவர்கள் தங்கி பயிற்சி பெறும், ஊரக வேளாண் பணி அனுபவ திட்ட துவக்க விழா நடந்தது. துறை தலைவர் தமிழ்செல்வி, திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜா, குழு ஆசிரியர் காளிதாஸ் வழிகாட்டுதல்படி, வெங்கடாம்பேட்டை ஊராட்சி தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவிற்கு மாணவ குழு தலைவர் ஹரிஷ் துவக்க உரையாற்றினார். குறிஞ்சிப்பாடி தி.மு.க., ஒன்றிய செயலாளர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
இத்திட்டத்தின் நோக்கம், சிறப்பம்சங்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து வேளாண் மாணவர்கள் ஹரிஷ்ராம், ஹர்ஷவர்தன், ஹேம்நாத், இன்பத்தமிழன், அய்யப்பன், ஜெய்பிரகாஷ், ஜனார்த்தனன், ஜாசிம், ஜெயகார்த்திக் விளக்கி பேசினர். விவசாயிகள் சண்முகம், அன்பழகன், செல்லக்கண்ணு, மணிகண்டன், வீரப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவர் குழு துணை தலைவர் ஹர்ஷக் மற்றும் ஹரிஷ் செல்வம் நன்றி கூறினர். தொடர்ந்து விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

