தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சித்த மருத்துவத்திற்கு தனி பல்கலைக்கழகம்

 சித்த மருத்துவத்திற்கு தனி பல்கலைக்கழகம்

 சித்த மருத்துவத்திற்கு தனி பல்கலைக்கழகம்


ADDED : ஜூன் 20, 2026 07:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 07:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சித்த மருத்துவதுவத்திற்கென தனி பல்கலைக்கழகம் உருவாக்க கோரிக்கை எழுந்துள்ளது.

உலக தமிழ் பாரம்பரிய மருத்துவ சங்க தலைவர் நாகவேல், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், தொன்மையான மருத்துவமான, தமிழ் பாரம்பரிய மருத்து வத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும்; பாரம்பரிய மருத்துவத்திற்கு நல வாரியம் அமைத்து கொடுக்க வேண்டும்; அரிதான மருத்துவ பொருட்கள் , தாவரங்களை பாரம்பரிய டாக்டர்கள் பயன்படுத்தும் வகையில், சட்ட பாதுகாப்பு கொடுத்து, அந்த மருத்துவத்தை தொடர்ந்து செய்வதற்கு ஆவண செய்ய வேண்டும்; தமிழ் பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியான சித்த மருத்துவத்திற்கென தனி பல்கலைக்கழகம் உருவாக்கி தர வே ண்டும் என்பன உள்ளிட்ட, 13 அம்ச கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

அரசு மருத்துவமனையில், சித்த மருத்துவ பிரிவில், பாரம்பரிய மருத்துவத்திற்கு தனிப்பிரிவு அமைத்திட வேண்டும்;

இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் பொக்கிஷமான, வெளிநாட்டிற்கு எடுத்து செல்லப்பட்ட ஓலைச்சுவடிகளை மீட்டெடுக்க உதவிட வேண்டும்; அரசு பத்திரிக்கை துறையில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, மூலிகை இனம் காணல் பற்றிய விழிப்பு ணர்வு பாடத்திட்டங்கள் அறி முக செய்தல் வேண்டும்;

தமிழக பல்கலைகளில் முக்கியமாக, பாரம்பரிய மருத்துவ முறை பட்டய படிப்பு, இளங்கலை படிப்பு, முதுகலை படிப்பு கொண்டு வர வேண்டும்; என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகள், அதில் இடம் பெற்றுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us