/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
4 ஊர்களை கண்காணிக்கும் ஒரே உணவு பாதுகாப்பு அலுவலர்
/
4 ஊர்களை கண்காணிக்கும் ஒரே உணவு பாதுகாப்பு அலுவலர்
4 ஊர்களை கண்காணிக்கும் ஒரே உணவு பாதுகாப்பு அலுவலர்
4 ஊர்களை கண்காணிக்கும் ஒரே உணவு பாதுகாப்பு அலுவலர்
ADDED : ஏப் 09, 2025 07:35 AM
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் பணியாற்றி வந்தார். புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ரவிச்சந்திரன் அரியலுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் நெல்லிக்குப்பத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. கடலுாரில் பணிபுரியும் சந்திரசேகர் என்பவர் கூடுதலாக நெல்லிக்குப்பம் நகராட்சியையும் சேர்த்து கவனிக்கிறார்.
இவர், கூடுதலாக பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம் பகுதிகளையும் கவனிப்பதால் ஒரு இடத்தில் கூட நிலையாக பணியாற்ற முடியாத நிலை உள்ளது.
பல உணவு பொருட்கள் விற்பனை கடைகளில் தரமில்லாத பொருட்கள் விற்பனை நடக்கிறது. அதே போல் பல கடைகளிலும் கலப்பட பொருட்கள் விற்பனையும் நடக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், ஓட்டலில் சாப்பிட்ட உணவு தரமில்லாததால் 6 பேருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க உடனடியாக நிரந்தர உணவு பாதுகாப்பு அலுவலரை நியமிக்க வேண்டும்.