/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீஸ் நிலையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
/
போலீஸ் நிலையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
ADDED : மார் 16, 2024 11:58 PM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள தனி அலுவலகத்தில் பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு செயல்படுகிறது.
இங்கு, சாராயம் கடத்தி வந்தது மற்றும் ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட 100 க்கும் மேற்பட்ட பைக்குகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
அப்பகுதி சுத்தம் செய்யப்படாமல், புதர் மண்டி இருப்பதால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது.
இந்நிலையில், அங்கிருந்து 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று, கலால் போலீஸ் நிலையம் உள்ளே புகுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அச்ச மடைந்து வெளியே ஓடிவந்தனர்.
அதையடுத்து, வரக்கால்பட்டை சேர்ந்த பாம்பு பிடி ஆர்வலர் கிருபாகரனுக்கு தகவல் கொடுத்தனர்.அவர் வந்து போலீஸ் நிலையம் உள்ளே இருந்த பாம்பை லாவகமாக பிடித்து அப்புறப்படுத்தினார்.

