/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அய்யனார் கோவிலில் திருட்டு: விருதை அருகே பரபரப்பு
/
அய்யனார் கோவிலில் திருட்டு: விருதை அருகே பரபரப்பு
ADDED : நவ 04, 2025 01:31 AM
விருத்தாசலம்:  ஆலடி அய்யனார் கோவிலில் உண்டியலை துாக்கிச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த ஆலடி ஏரிக்கரையில் உள்ள அய்யனார் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த உண்டியலை துாக்கிச் சென்றனர். மேலும், அங்கு தொங்க விடப்பட்டிருந்த பித்தளை மணியையும் எடுத்துச் சென்றனர்.
நேற்று காலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் உண்டியல் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவலறிந்த ஆலடி போலீசார் விசாரணை நடத்தினர்.
மர்ம நபர்கள் உண்டியல் மற்றும் பித்தளை மணியை   திருடிச் சென்று, உண்டியலில் இருந்த காணிக்கையை எடுத்து கொண்டு, காலியான உண்டியலை அருகில் உள்ள வயலில் வீசி சென்றது தெரியவந்தது. கடலுார் தடயவியல் பிரிவு டி.எஸ்.பி., ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் தடயங்களை சேகரித்தனர்.
கோவிலில் உண்டியலை துாக்கிச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

