/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டி விருதை மாற்றுத்திறன் மாணவர் சாதனை
/
முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டி விருதை மாற்றுத்திறன் மாணவர் சாதனை
முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டி விருதை மாற்றுத்திறன் மாணவர் சாதனை
முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டி விருதை மாற்றுத்திறன் மாணவர் சாதனை
ADDED : அக் 08, 2025 11:20 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆண்கள் பள்ளி மாற்றுத்திறன் மாணவர் கவிமணி, மாநில அளவிலான முதல்வர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடந்தது.
அதில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான குண்டு எறிதல் போட்டியில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் கவிமணி, முதலிடம் பிடித்தார்.
தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், மேலகொட்டையூர், தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டியில், கடந்த 6ம் தேதி மாநில அளவிலான போட்டி நடந்தது. இதில், மாநிலம் முழுவதும் இருந்து 32 மாற்றுத் திறன் மாணவர்கள் பங்கேற்றனர்.
விருத்தாசலம் மாற்றுத்திறன் மாணவர் கவிமணி, அதிகதுாரம் குண்டு எறிந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுழற்கோப்பை, பதக்கம் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜசோழன், பிரகாசம், மனோகர், சிறப்பாசிரியர் இளவரசன் உடனிருந்தனர்.
சாதனை படைத்த மாணவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சி.இ.ஓ., எல்லப்பன், டி.இ.ஓ., துரைபாண்டியன் ஆகியோர் மொபைல் போனில், மாணவர் கவிமணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாற்றுத்திறன் மாணவர் கவமணி, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.