ADDED : பிப் 15, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : குறிஞ்சிப்பாடி அருகே சாலை அமைக்கும் பணியின்போது, மோட்டார் பைக் மீது ரோடு ரோலர் மோதியதில் வாலிபர் தலை நசுங்கி உயிரிழந்தார்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள நத்தமேடு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் சிவராஜ், 33;வெல்டராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மதியம் பணி முடிந்து பைக்கில் புவனகிரியில் இருந்து நத்தமேடு வந்துள்ளார்.
கொத்தவாச்சேரி செக்போஸ்ட் அருகே வந்தபோது, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரோடு ரோலர், பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சிவராஜ் மீது, ரோடு ரோலர் தலையில் ஏறியதில், தலை நசுங்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.