355 ஓட்டுகளே உள்ள 3 சட்டசபை தொகுதிகளை உள்ளடங்கிய கிராமம்
355 ஓட்டுகளே உள்ள 3 சட்டசபை தொகுதிகளை உள்ளடங்கிய கிராமம்
ADDED : ஏப் 14, 2026 07:20 PM
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே உள்ள ஒரு கிராமம் மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளடங்கியுள்ளதால் கிராமமே எப்போதும் படு பிசியாகவே இருந்து வருகிறது.
நடுவீரப்பட்டு அடுத்த கொட்டிக்கோணாங்குப்பம் கிராமத்தில் மொத்தம் 355 வாக்காளர்கள் உள்ளனர்.இந்த வாக்காளர்களில் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட சி.என்.பாளையம் ஊராட்சியில் 141 வாக்காளர்களும்,பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட சாத்திப்பட்டு ஊராட்சியில்158 வாக்காளர்களும்,நெய்வேலி தொகுதிக்குட்பட்ட கீழ்மாம்பட்டு ஊராட்சியில் 56 வாக்காளர்களும் உள்ளனர்.
சிறிய ஊரான கொட்டிக்கோணாங்குப்பம் கிராமம் மூன்று சட்டசபை தொகுதிக்குள் வருவதால்,தினமும் மூன்று தொகுதிக்குட்பட்ட வேட்பாளர் வருகையால் இந்த கிராமமே படுபிசியாக உள்ளது.
மூன்று தொகுதிக்குட்பட்ட வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட பல்வேறு வாகனங்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் ஊரே சவுண்டு மயமாகவே உள்ளது.
