UPDATED : அக் 27, 2026 04:37 PM
ADDED : அக் 27, 2026 04:06 PM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம் நகராட்சி வான்பாக்கத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இவர்கள் நகரத்துக்கு 2 கி.மீ., துாரம் வர வேண்டும். அதனால், இவர்கள் நலன் கருதி கடந்த 2009 ம் ஆண்டு சமுதாய கூடம் கட்டி திறந்தனர். ஆனால் திறப்பு விழா நடந்ததோடு சரி அடிப்படை வசதிகள் இல்லாததால் பயன்பாட்டுக்கு வரவில்லை. அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளி கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்தது.இதனால் சமுதாய கூடத்தில் பள்ளி செயல்பட்டது. பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டிய பிறகு சமுதாய கூடத்தை காலி செய்தனர். அதன் பிறகு சமுதாய கூடம் பயன்பாடின்றி பாழாகி வருகிறது.
