/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிரீமியர் கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடி வரும் சேந்திரகிள்ளை வாலிபர்
/
பிரீமியர் கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடி வரும் சேந்திரகிள்ளை வாலிபர்
பிரீமியர் கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடி வரும் சேந்திரகிள்ளை வாலிபர்
பிரீமியர் கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடி வரும் சேந்திரகிள்ளை வாலிபர்
ADDED : ஜூன் 11, 2025 07:49 PM

சிதம்பரம் அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், 32; பி.சி.ஏ., பட்டதாரி. கிராமத்தில் பிறந்தாலும் தனது திறமையின் மூலம், கலந்த 9 ஆண்டுகளாக தமிழ்நாடு பிரிமியர் கிரிக்கெட் லீக் (டி.என்.பி.எல்) தொடரில் விளையாடுகிறார்.
2012 ம் ஆண்டு கடலுார் மாவட்ட கிரிக்கெட் கிளப்பில் தொடங்கிய, இவரது கிரிக்கெட் பயணம் 2014 ம் ஆண்டு மூன்றாம் தர போட்டியிலும், 2015 ம் ஆண்டு முதல் தற்போது வரையில், சென்னையின் முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாட வருகிறார்.
2015 ம் ஆண்டு துவக்கப்பட்ட தமிழ்நாடு பிரிமியர் கிரிக்கெட் லீக் (டி.என்.பி.எல்) போட்டியில் விபி திருவள்ளூர் வீரன் அணியில் இடம் பிடித்து, 2016 வரை விளையாடினார். 2017, 2018 ம் ஆண்டு வி.பி காஞ்சி வீரன்ஸ் அணியிலும், 2019, 2021 ம் ஆண்டுகளில் மதுரை பேந்தர் ஸ் அணியிலும், 2022 ம் ஆண்டு பால்ஸி திருச்சி அணியிலும், 2023, 2024 ம் ஆண்டுகளில் நெல்லை ராயல் கிங் அணியில் விளையாடு வருகிறார்.
தற்போது திருப்பூர் தமிழன் அணியில் விளையாடி வருகிறார்.2020 ஆம் ஆண்டு ரஞ்சித் டிராபி தொடரிலும் 2019 மற்றும் 2021ம் ஆண்டுகளில் விஜய் ஹசாரே தொடரிலும், 2021 ம் ஆண்டு சையத் முஸ்தாக் அலி தொடர்களில் பங்கேற்று ஏராளமான விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமத்தில் பிறந்தாலும், தனது அசாத்திய திறமை மூலம் தற்போது, தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக்கில் விளையாடி வருவது, கடலுார் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதுடன், சுற்றுப்பகுதி இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறார், என்பது குறிப்பிடத்தக்கது.