/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப சாவு
/
லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப சாவு
ADDED : நவ 21, 2024 05:51 AM
காட்டுமன்னார்கோவில்: குமராட்சி அருகே பஞ்சராகி நின்ற லாரி மீது பைக் மோதிய விபத்தில், தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.
காட்டுமன்னார்கோவில் உடையார்குடியை சேர்ந்த பாண்டியன் மகன் வீரச்செல்வன், 35; பரங்கிப்பேட்டை தனியார் பவர் பிளாண்ட் நிறுவன ஊழியர். நேற்று காலை பைக்கில்,சிதம்பரம்-திருச்சி பைபாஸ் வழியாக வேலைக்கு சென்றார். குமராட்சி அடுத்த நந்திமங்கலம் என்ற இடத்தில் சென்றபோது, அங்கு பஞ்சராகி நின்றி சிமெண்ட் லோடு ஏற்றிய லாரி மீது பைக் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த வீரச்செல்வன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த குமராட்சி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த வீரச்செல்வனுக்கு மனைவி பிரபாவதி, 30; இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இது குறித்து பவர் பிளான்டில் உடன் வேலை செய்த ஊழியர் முத்தரசன் கொடுத்த புகாரின்பேரில், குமராட்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

