sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி புவனகிரி அருகே பா.ம.க., வினர் சாலை மறியல்   பதற்றம் போலீஸ் குவிப்பு

/

தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி புவனகிரி அருகே பா.ம.க., வினர் சாலை மறியல்   பதற்றம் போலீஸ் குவிப்பு

தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி புவனகிரி அருகே பா.ம.க., வினர் சாலை மறியல்   பதற்றம் போலீஸ் குவிப்பு

தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி புவனகிரி அருகே பா.ம.க., வினர் சாலை மறியல்   பதற்றம் போலீஸ் குவிப்பு


ADDED : நவ 04, 2024 05:27 AM

Google News

ADDED : நவ 04, 2024 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே தகராறில் ஈடுபட்ட மேலும் சிலரை கைது செய்ய வலியுறுத்தி விருத்தாசலம் சாலையில் பா.ம.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வத்துரை,28; பா.ம.க., நிர்வாகி. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நண்பர்களுடன் பி.உடையூர் பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள சுடுகாட்டு பாதையில் அமர்ந்து மது குடித்துள்ளார்.

அப்போது புவனகிரி பி.உடையூர் சேர்ந்த சரவணமூர்த்தி,26; கவிவர்மன்,21; அன்பழகன், 24; கதிரவன், 25; பிரேம்குமார்,20; விக்ரமன், 24; ஆகியோர் அங்கு மது குடிக்க சென்றனர்.

இரு தரப்பினர்களுக்குள் முன் விரோதம் இருந்த நிலையில் அங்கு மது குடிப்பதில் இருதரப்பினருக்கும் தரராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணமூர்த்தி தரப்பினர் செல்லதுரையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயமடைந்த செல்வதுரையை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜமுத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர்.

புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து சரவணமூர்த்தி உள்ளிட்ட 6 பேரை நேற்று முன் தினம் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை கைது செய்ய வலிறுத்தி விருத்தாசலம்- சிதம்பரம் சாலையில் மஞ்சக்கொல்லை பஸ் நிறுத்ததில் நேற்று காலை 10.30 மணிக்கு பா.ம.க., மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமையில் பா.ம.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது

தகவல் அறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக், இன்ஸ்பெக்டர்கள் அம்பேத்கர், அமுதா, சுஜாதா, ஜெர்மனிலதா மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்படாததால் மறியலை தொடர்ந்தனர். இதனால் அந்த பகுதியில் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த மாநில வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் நின்றவர்களை போக்குவரத்திற்கு இடையூர் இல்லாமல் மஞ்சக்கொல்லை சாலையில் அழைத்துச்சென்று சமரசம் செய்ததுடன், போலீசாரிடம் சில கோரிக்கைளை வைத்தார். அதில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் பகல் 12.00 மணிக்கு அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

இதன் பின் போக்குவரத்து சீரானது. இதனால் அந்த பகுதியில் 1:30 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us