ADDED : அக் 16, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார், சிங்காரத்தோப்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாள் விழா நடந்தது.
கடலுார் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அப்துல் கலாம் பொதுநலப் பேரவை சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில், அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்ட தலைவர் சுப்புராயன் வரவேற்றார். நிகழ்ச்சியில் நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் பால்கி, ரமேஷ், தனியார் பஸ் தொழிலாளர் சங்கத் தலைவர் குருராமலிங்கம், கோபிநாத், வீரமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.