ADDED : ஆக 31, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
கடலுார், செப். 1–
ஆயுத சட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
காடாம்புலியூர் போலீஸ் ஸ்டேஷனில் தொடரப்பட்ட ஆயுதச் சட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு ரவுடியான சாத்திப்பட்டை சேர்ந்த சின்னப்பராஜ் மகன் ரினோ ஸ்டீபன்ராஜை,24; கைது செய்து ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்து பண்ருட்டி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
அதன்பேரில், தலைமறைவாக இருந்த ரினோ ஸ்டீபன்ராஜை காடாம்புலியூர் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
