/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் கருத்தரங்கில் கல்வியாளர்கள் 'பளீச்'
/
போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் கருத்தரங்கில் கல்வியாளர்கள் 'பளீச்'
போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் கருத்தரங்கில் கல்வியாளர்கள் 'பளீச்'
போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் கருத்தரங்கில் கல்வியாளர்கள் 'பளீச்'
ADDED : பிப் 04, 2024 05:26 AM

கடலுார் : கடலுாரில், 'தினமலர்' நடத்திய ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கில், ஆசிரியர் சந்தேகத்திற்கு கல்வியாளர்கள் அளித்த பதில்;
மலர்விழி, ஆசிரியர், தும்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.
போதை பழக்கத்திற்கு அடிமையாக உள்ள மாணவர்களை திருத்துவது எப்படி?
கல்வியாளர் புகழேந்தி
போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள், ஜெயிப்பதை ருசி பார்க்கவில்லை.
அதனால் தான் போதைக்கு அடிமையாக இருக்கின்றனர். இது இன்றைய தலைமுறைக்கு உள்ள சிக்கல்.
ஒரு மாணவனை ஆசிரியர் புரிந்து கொண்டு பரபரப்பாக இல்லாமல் இயல்பாக கூறினால், மாணவர்கள் அதிலிருந்து வெளிவருவார்கள் என்றார்.
மனிதவள அதிகாரி மதுமிதா கோமதிநாயகம்
போதை என்ற ராட்சசனை நிறுத்த முடியாது. அதை பயன்படுத்தும் மாணவர்களை கண்டறிந்து, கவுன்சிலிங் வழங்க வேண்டும். பள்ளி வளாகத்திற்கு அருகில் போதை பொருட்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி விற்பனை செய்தால், உடனடியாக போலீசில் புகார் செய்ய வேண்டும்.