/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம்
/
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : அக் 25, 2024 06:45 AM

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் கலைமகள் பள்ளியில், காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம் மற்றும் கலைமகள் குழுமம் சார்பில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பள்ளி தாளாளர் பரணிதரன், செயலாளர் பாலறாவாயன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சஞ்சய்காந்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், பள்ளி நிறுவனர் முத்துக்குமரன் ஆகியோர் பங்கேற்று விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி அசைத்து துவங்கி வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக காஸ்மோபாலிட்டன் அரிமா தலைவர் ரமேஷ்குமார், செயலாளர் வித்யாசாகர், ரவிச்சந்திரன், முகம்மது யூசுப், கதீர், சம்பந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விபத்தில்லா மற்றும் புகையில்லா தீபாவளி கொண்டாட வேண்டும். சீன பட்டாசுகளை பயன்படுத்தக்கூடாது. பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட முழக்கத்துடன் மாணவர்கள், காட்டுமன்னார்கோவில் கடை வீதி வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

