/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் கபடி வீரர்களுக்கு விபத்து காப்பீடு விண்ணப்பம்
/
கடலுார் கபடி வீரர்களுக்கு விபத்து காப்பீடு விண்ணப்பம்
கடலுார் கபடி வீரர்களுக்கு விபத்து காப்பீடு விண்ணப்பம்
கடலுார் கபடி வீரர்களுக்கு விபத்து காப்பீடு விண்ணப்பம்
ADDED : நவ 22, 2024 05:52 AM

கடலுார்: தேசிய ஜூனியர் கபடி போட்டியில் பங்கேற்கும் கடலுார் மாவட்ட வீரர்களுக்கு காப்பீடு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
வேலுார் மாவட்டம், காட்பாடியில் 60வது ஜூனியர் ஆண்கள் கபடி போட்டி இன்று முதல், வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் கடலுார் மாவட்ட அணி வீரர்கள் 12 பேருக்கு கடலுாரில் பரிதி பிரதர்ஸ் கபடி அணி சார்பில் இலவச சீருடை மற்றும் 1 ஆண்டிற்கான விபத்து காப்பீட்டிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ்குமார், தமிழ்நாடு மாநில கபடி கழக துணைத் தலைவர் வேலவன் ஆகியோர் வீரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் கதிரவன், துணைத் தலைவர் நவநீதராமன், நடுவர் குழு கன்வீனர் புஷ்பராஜ், சக்திவேல், பரிதி பிரதர்ஸ் ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகம், காவல்துறை கபடி முரளி, ஞானவேல்முருகன், தேசிய வீரர்கள் மணிகண்டன், குணசேகர், பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் நடராஜன் செய்திருந்தார். முதன் முறையாக வீரர்களுக்கு மருத்துவ செலவிற்காக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.