தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குறுக்கு சாலைகளால் விபத்துக்கள் அதிகரிப்பு

 குறுக்கு சாலைகளால் விபத்துக்கள் அதிகரிப்பு

 குறுக்கு சாலைகளால் விபத்துக்கள் அதிகரிப்பு


ADDED : மார் 13, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: கடலுார் - சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் பல்வேறு இடங்களில் குறுக்கு சாலைகளால் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் குறவன்குப்பம் முதல் ரோமாபுரி வரை நான்கு வழிச்சாலை அமைத்து சாலையை அகலப்படுத்தி சென்டர் மீடியன் வசதியுடன் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் விபத்துக்களை குறைப்பதற்காக சென்டர் மீடியன் உள்ளது.

பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத்துறை தேவையில்லாமால் அதிகமான குறுக்கு சாலைக்கு இடைவெளி விட்டுள்ளதால் வாகனங்கள் சாலையில் செல்லும் போது திடீர் என புகுந்து வரும் வாகனங்களால் இப்பகுதியில் தொடர்ந்து வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.

இந்த விபத்துகளில் சிக்கி ஏராளமானோர் படு காயமடைந்து உயிரிழந்துள்ளனர். மேலும் சென்டர் மீடியனில் தெரு விளக்கு இலலாததால் சாலையில் இருள் சூழந்து காணப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சென்டர் மீடியனில் பல்வேறு இடங்களில் உள்ள தேவையற்ற குறுக்கு வழிச்சாலை வழியாக வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு சுவர் அமைக்கவும், சென்டர் மீடியனில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us