/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாதனை விளக்க கூட்டம்: எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
சாதனை விளக்க கூட்டம்: எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : மே 15, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், பாதிரிக்குப்பத்தில் நடந்தது.
தெற்கு ஒன்றிய செய லாளர் விஜயசுந்தரம் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சுந்தரமூர்த்தி வரவேற்றார்.
அய்யப்பன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'கடலுார் தொகுதியில் துறைமுக வளர்ச்சி பணிகள், சில்வர் பீச் அழகுபடுத்தும் பணி, மஞ்சக்குப்பம் மைதானத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய திட்டங்கள், பெண்ணையாற்றின் கரைகளில் தடுப்பு சுவர் அமைத்தல் என 800 கோடி ரூபாய்க்கு வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.