/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் சி.கே.,பள்ளி மாணவர்கள் சாதனை
/
கடலுார் சி.கே.,பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : மே 17, 2025 04:02 AM

கடலுார்: கடலுார் சி.கே., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.
கடலுார் சி.கே., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பிரைமோ பெர்லி ராய், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 494 மதிப்பெண் பெற்று கடலுார் வட்டார அளவில் சிறப்பிடம் பிடித்தார். மாணவர் அஜ்னேஷ் பிரசாத் 492 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவிகள் அனுஷ்கா, லத்திகா 491 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
அறிவியல் பாடத்தில் 6 மாணவர்கள், சமூக அறிவியல் பாடத்தில் 7 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். இப்பள்ளி 99 சதவீதம் பெற்று சாதனை படைத்தது. சாதனை மாணவ, மாணவிகளையும், தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாக இயக்குனர் அமுதவள்ளி ரங்கநாதன், பள்ளி முதல்வர் திவ்யாமேரி பாராட்டினர்.