ADDED : மார் 25, 2026 11:06 PM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் சாதனையாளர்கள் தின விழா நடந்தது. பள்ளி முதல்வர் ரவி தலைமை தாங்கி பேசினார்.
2025-2026ம் கல்வியாண்டில், கற்பித்தலில் சிறந்து விளங்கிய ஆசிரியர்கள் உமா மகேஸ்வரி, ரம்யா, நித்யபூரணி மற்றும் சவுந்தர்யா ஆகியோருக்கு பள்ளி முதல்வர் கேடயம் வழங்கி கவுரவித்தார்.
மேலும் நடப்பாண்டில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருகை புரிந்த ஆசிரியர் வெண்ணிலா, பாக்கியலட்சுமி ஆகியோரை பாராட்டி விருது வழங்கி கவுரவித்தனர்.
இந்த ஆண்டிற்கான சிறந்த நட்சத்திர மாணவர் விருது, 5 ம் வகுப்பு பயிலும் முஷீரா; 7 ம் வகுப்பு பயிலும் மோதிகா என்ற மாணவிக்கும் வழங்கினர்.
தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
