/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவியர் சாதனை
/
விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவியர் சாதனை
ADDED : அக் 26, 2024 06:53 AM

கடலுார்: விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.
கடலுார் வேணுகோபாலபுரம் வரதம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 மாணவி சத்யபிரியா ஜார்கண்ட் மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்குபெற தேர்வு பெற்றுள்ளார்.
வருவாய் மாவட்ட அளவில் நடந்த தடகளப் போட்டியில் இப்பள்ளி மாணவியர் பங்கு பெற்ற அனைத்து போட்டிகளிலும் முதலாம் பரிசு பெற்றனர்.
மாணவி நிவேதா உயரம் தாண்டுதல் மற்றும் தத்தி தாவுதல் இரண்டிலும் முதல் இடம் பெற்றார்.
நித்தியா 600 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம், சுபிக் ஷா 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் மற்றும் நித்தியா, சுபிக்ஷா, சாதனா, காவியா ஆகிய நான்கு மாணவிகளும் ஓட்டப் பந்தயத்தில் பங்கு பெற்று ஈரோட்டில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.