தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருதை மகப்பேறு மருத்துவமனை திட்டம் நிறைவேற நடவடிக்கை தேவை

 விருதை மகப்பேறு மருத்துவமனை திட்டம் நிறைவேற நடவடிக்கை தேவை

 விருதை மகப்பேறு மருத்துவமனை திட்டம் நிறைவேற நடவடிக்கை தேவை


ADDED : ஆக 18, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 04:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மகப்பேறு மருத்துவமனை அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளதால், இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் திட்டக்குடி, விருத்தாசலம், வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், நெய்வேலி பகுதிகளை சேர்ந்த தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. சுகப்பிரசவம் தவிர்த்து, அறுவை சிகிச்சை செய்த தாய்மார்கள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் மகப்பேறு பிரிவில் வசதிகள் உள்ளன. பிறந்ததும் மூச்சுத்திணறல் போன்ற உபாதைகளுடன் பாதிக்கும் குழந்தைகளை கவனிக்கும் வகையில் பச்சிளம் சிசு பராமரிப்பு வார்டும் உள்ளது.

விருத்தாசலம் மருத்துவமனையில் மாதந்தோறும், 350க்கும் மேற்பட்ட பிரசவம் பார்க்கப்பட்டு வரும் நிலையில், இட நெருக்கடி மற்றும் டாக்டர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். இதனால், மகப்பேறு பிரிவுக்கு தனி மருத்துவமனை கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி, நகர்மன்ற சேர்மன் சங்கவி முயற்சியால், மகப்பேறு மருத்துவமனை தனியாக அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக தில்லை நகரில், முன்னாள் அமைச்சர் கணேசன் வீட்டின் பின்புறம், தனிநபர் ஆக்கிரமித்து வைத்திருந்த காலி மனையை, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகம் மீட்டது.

அப்போது, கடலுாரில் நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மகப்பேறு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்படும் என எதிர்பார்த்த நிலையில், நகராட்சிகளின் மண்டல இயக்குனர் அலுவலகத்தில் கோப்பு தேங்கியதால், அறிவிப்பு வெளியாகவில்லை.

மகப்பேறு சிகிச்சைக்கு தனியாக மருத்துவமனை அமைந்தால் அதிநவீன உபகரணங்கள், கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மூலம் சிறப்பு சிகிச்சைகளும் கூடுதலாக கிடைக்கும். அதுபோல், சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு சிதம்பரம், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படுவதும் தவிர்க்கப்படும். இதனால், நெடுந்துார பயணத்தை தவிர்த்து, உள்ளூரில் கட்டணம் செலுத்தி தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பதும் குறையும்.

எனவே, கடந்த தி.மு.க., ஆட்சியில் துவங்கப்படாமல் விடப்பட்ட மகப்பேறு மருத்துவமனை திட்டத்தை த.வெ.க., ஆட்சியில் நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us