/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆக்டிவ் பிட்னஸ் சென்டர் மஞ்சக்குப்பத்தில் திறப்பு
/
ஆக்டிவ் பிட்னஸ் சென்டர் மஞ்சக்குப்பத்தில் திறப்பு
ADDED : பிப் 15, 2024 06:37 AM

கடலுார், : கடலுார் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு ஞானஒளி தெருவில் ஆக்டிவ் பிட்னஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்மென்ட்ஸ் திறக்கப்பட்டுள்ளது.
கடலுார் நேதாஜி ரோட்டில் ஆக்டிவ் பிட்னஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்மென்ட்ஸ் கடந்த 2011ம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்நிலையில், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு ஞானஒளி தெருவில் ஆக்டிவ் பிட்னஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்மென்ட்ஸ் புதிய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, ஆக்டிவ் பிட்னஸ் உரிமையாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். வள்ளி விலாஸ் முரளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விளையாட்டு பொருட்கள், உடற்பயிற்சி கருவிகள், உடற்பயிற்சி செய்யும் கூடாரம் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட அனைத்து வசதிகள், பள்ளிகளுக்கு கோப்பைகள், சீல்டுகள் மற்றும் அனைத்து விளையாட்டு பொருட்கள் தரமாக மொத்தமாகவும், சில்லரையாகவும் இங்கு கிடைக்கும் என ராஜசேகர் கூறினார்.
அப்போது, ஆசிரியர்கள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

