ADDED : ஏப் 10, 2026 11:23 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் பிரேமலதா, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்திற்கு சென்றார். இதையடுத்து, அவரது இளைய மகன், நடிகர் சண்முகபாண்டியன், விருத்தாசலத்தில் மூன்று நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
அதன்படி, விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் அலுவலகத்தில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன், திறந்தவேனில் நின்றபடி சண்முகபாண்டியன் வாக்காளர்களிடம் முரசு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். மேலும், தி.மு.க., அரசின் சாதனைகள் பொது மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
ஜங்ஷன்ரோடு, பாலக்கரை ரவுண்டானா, கடைவீதி நான்குமுனை சந்திப்பு, தெற்குதெரு வழியாக 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று, பொது மக்கள், வியாபாரிகளிடம் முரசு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.
தே.மு.தி.க., தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, மாநில துணை செயலாளர் பன்னீர்செல்வம், தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, நகராட்சித் தலைவர் சங்கவிமுருகதாஸ், இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், வி.சி., நகர செயலாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் தென்றல், காங்., நகர தலைவர் ரஞ்சித்குமார் உட்பட கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். நகர செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
