தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நடிகர் கட்சியின் கொள்கை தெரியவில்லை: திருமாவளவன் 'அட்டாக்'

 நடிகர் கட்சியின் கொள்கை தெரியவில்லை: திருமாவளவன் 'அட்டாக்'

 நடிகர் கட்சியின் கொள்கை தெரியவில்லை: திருமாவளவன் 'அட்டாக்'


ADDED : ஏப் 15, 2026 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 10:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி : நெய்வேலி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரனை ஆதரித்து, வி.சி.க.,தலைவர் திருமாவளவன் நேற்று இரவு நெய்வேலியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

புதிதாக தொடங்கிய நடிகர் கட்சியில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று கூவி அழைத்தார்கள் அங்கு யாரும் செல்லவில்லை.

அவர்களுக்கு கொள்கையே என்னவென்று தெரியவில்லை. மறைமுகமாக அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

தியேட்டரில் தான் விசில் அடிக்க முடியும். சட்டசபையில் விசில் அடிக்க முடியாது. அவர்களை சினிமா தியேட்டருக்கு தான் அனுப்ப வேண்டும்.

நாம் தி.மு.க., கூட்டணியில் பயணித்து பல தேர்தல்களை சந்தித்துள்ளோம். 2 எம்.பி.,க்களை பெற்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளோம்.

இந்த தேர்தலில் தி.மு.க.,வு டன் பல்வேறு கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளது. நெய்வேலி தொகுதியின் தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரன் மிகவும் அன்பானவர். பண்பாளர். அவரை பெருவாரியான ஓட்டு வித்தியசத்தில் ஜெயிக்க வையுங்கள்.

அண்ணன் ஸ்டாலின் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகால சிறப்பான ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், நம்மை காக்கும் 48, மக்களை தேடி மருத்துவம் காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முன்மாதிரியாக மாற்றியுள்ளார். சபா ராஜேந்திரனுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us