நடிகர் கட்சியின் கொள்கை தெரியவில்லை : திருமாவளவன் 'அட்டாக்'
நடிகர் கட்சியின் கொள்கை தெரியவில்லை : திருமாவளவன் 'அட்டாக்'
ADDED : ஏப் 16, 2026 04:33 AM

நெய்வேலி : நெய்வேலி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரனை ஆதரித்து, வி.சி.க.,தலைவர் திருமாவளவன் நேற்று இரவு நெய்வேலியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
புதிதாக தொடங்கிய நடிகர் கட்சியில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று கூவி அழைத்தார்கள் அங்கு யாரும் செல்லவில்லை. அவர்களுக்கு கொள்கையே என்னவென்று தெரியவில்லை. மறைமுகமாக அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
தியேட்டரில் தான் விசில் அடிக்க முடியும். சட்டசபையில் விசில் அடிக்க முடியாது. அவர்களை சினிமா தியேட்டருக்கு தான் அனுப்ப வேண்டும். நெய்வேலி தொகுதியின் தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரனை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வையுங்கள். ஸ்டாலின் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகால சிறப்பான ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முன்மாதிரியாக மாற்றியுள்ளார். சபா ராஜேந்திரனுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
