/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வளர்ச்சி திட்டப்பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு
/
வளர்ச்சி திட்டப்பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு
ADDED : மே 15, 2025 11:48 PM

சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றிய ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடக்கிறது. அதனை, கூடுதல் கலெக்டர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர். சிறுபாக்கம் பஸ் நிலையம் அடிப்படை வசதிகளின்றி உள்ளதை சீரமைக்க உத்தரவிட்டார்.
பின், மரக்கன்றுகள் வளர்ப்பு பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ஒரங்கூர் மற்றும் எஸ்.புதுார் ஊராட்சிகளில் கலைஞர் வீடு, கான்கிரீட் வீடுகள் கட்டுமானப் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். மங்களூர் பி.டி.ஓ.,க்கள் முருகன், சண்முக சிகாமணி, பொறியாளர்கள் சண்முகம், செந்தில் உடனிருந்தனர்.