/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வளர்ச்சி திட்ட பணிகள் கூடுதல் இயக்குனர் ஆய்வு
/
வளர்ச்சி திட்ட பணிகள் கூடுதல் இயக்குனர் ஆய்வு
ADDED : ஜூன் 21, 2025 12:53 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் ஒன்றியத்தில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.
விருத்தாசலம் ஊரட்சி ஒன்றிய அலுவலகத்தை இடித்து அகற்றி, புதிதாக 5.60 கோடி ரூபாய் மதிப்பில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி நடக்கிறது. இதனை கூடுதல் இயக்குனர் குமார் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பெரியகண்டியங்குப்பத்தில் 4 கோடி மதிப்பில் கட்டப்படும் உதவி இயக்குனர் அலுவலகம், தே.கோபுராபுரத்தில் 2.10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் மின்மயானம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
கூடுதல் கலெக்டர் சரண்யா, செயற் பொறியாளர் வரதராஜபெருமாள், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்கள் முருகன், ஷபானா அஞ்சம், பி.டி.ஓ.,க்கள் சங்கர், லட்சுமி, உதவி செயற்பொறியாளர் நாராயணன், பொறியாளர்கள் கார்த்திக், செல்வக்குமார், தேன்மொழி உடனிருந்தனர்.