/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காவல் நிலையங்களில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு
/
காவல் நிலையங்களில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு
ADDED : பிப் 21, 2025 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: வடலுார் மற்றும் நெல்லிக்குப்பம் காவல் நிலையங்களில் ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், ஆய்வு செய்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று மற்றும் நாளை கடலுார் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கும் விழாவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு நேற்று கடலுாருக்கு வந்த ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், வடலுார் மற்றும் நெல்லிக்குப்பம் காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது ஆவணங்களை பார்வையிட்டு, நிலுவையிலுள்ள வழக்கு விபரங்களை கேட்டறிந்து போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

