/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆதி திராவிட மக்கள் காங்., கட்சியுடன் இணைய வேண்டும்: காங்., அழைப்பு
/
ஆதி திராவிட மக்கள் காங்., கட்சியுடன் இணைய வேண்டும்: காங்., அழைப்பு
ஆதி திராவிட மக்கள் காங்., கட்சியுடன் இணைய வேண்டும்: காங்., அழைப்பு
ஆதி திராவிட மக்கள் காங்., கட்சியுடன் இணைய வேண்டும்: காங்., அழைப்பு
ADDED : நவ 24, 2025 07:13 AM
கடலுார்: ஆதி திராவிட மக்கள் தேசிய சிந்தனையுடன் காங்., கட்சியுடன் இணைய வேண்டும் என மேலிட பார்வையாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
அகில இந்திய காங்., க ட்சி கடலுார் மத்திய, மேற்கு மாவட்ட மேலிட பார்வையாளர் கே.பி.ஆர். நாயுடு கடலுாரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
அகமதாபாத்தில் நடந்த காங்., கட்சி மாநாட்டில் ராகுல் ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். அதாவது அடிமட்ட அளவில் காங்., கட்சியை பலப்படுத்துவது தான் அந்த திட்டம்.
தமிழகத்தில் காங்., கட்சியை பலப்படுத்த 38 மாவட்டங்களுக்கும் மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நான் கடலுார் மத்திய, மேற்கு மாவட்டத்துக்கு பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளேன்.
இதன் நோக்கம் பொதுமக்கள் ,காங்., கட்சி தொண்டர்களின் கருத்துகளை நேரடியாக கேட்டறிந்து, தலைமைக்கு அளிக்கும் அறிக்கைபடி , மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அதன்பிறகு வட்டாரம், மண்டலம், கிராமம் வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளனர். ஓட்டுச்சாவடி முகவர்களையும் நியமிக்க இருக்கிறோம். மிக முக்கியமாக காங்., கட்சி யை அடிமட்ட அளவில் வலுப்படுத்துவதற்கான ஒரு இயக்கமாக நான் இங்கு அனைத்து தரப்பினரையும் சந்திக்க உள்ளேன்.
தமிழகத்தில் ஆதிதிராவிடர்கள் அதிகம் உள்ளனர். காங்., கட்சி அம்பேத்கரின் கொள்கைகளை வழிநடத்தி செல்கிறது. ராகுல் எஸ்.சி.,. எஸ்.டி. மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை, பல்வேறு உரிமைகளை போராடி பெற ஆயத்தமாக உள்ளார். ஆதிதி ராவிட மக்கள் தேசிய சிந்தனையுடன் காங்., உடன் இணைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

